தமிழர் விடுதலை இயக்கத்தின் (telo) முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 30 வது ஆண்டு நினைவஞ்சலி எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தமிழர் விடுதலை இயக்கத்தின் உப தலைவர் ஹென்றி மகேந்திரன் அறிவித்துள்ளார்.
யாழ். நகரப் பகுதியில் உள்ள யு.எஸ் விருந்தினர் விடுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்தே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
வருடாந்தம் சித்திரை மாதம் 29 ஆம் திகதியில் இருந்து மே 06 ஆம் திகதி வரைக்கும் நினைவு தினத்தினை அனுஷ்டித்து வருவது வழக்கம்.
இந்த வருடம் 30வது நினைவு தினத்தினை காலை சட்டநாதன் ஆலயத்தில் பூசை வழிபாட்டுடன், மாலை 4.00 மணிக்கு அன்னார் உயிரிழந்த கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் கூறினார்.
அதன்பின்னர் எதிர்வரும் 08 ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். நுல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்தவுள்ளனர்.
இந்த நினைவஞ்சலி நிகழ்வு விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய பத்திரிகையாளர் ஆர், பகவான் சிங், சிறப்பு பேச்சாளாராகவும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.