ஸ்ரீநாக கன்னி அம்மன் கோவில் தீக்கிரை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி, பாலையடித்தோணா கடலூர் ஸ்ரீநாககன்னி அம்மன் கோவிலின் ஒருபகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் இன்று புதன்கிழமை (22) காலை முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கோவில் நேற்று செவ்வாய்கிழமை (21) இரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.