ஸ்ரீடெலோ காரியாலயம் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணத்தில், ஸ்ரீடெலோ காரியாலயம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலுள்ள காரியாலயம் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts