ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளுக்கான தீர்வை வரியை முற்றாக நீக்க அரசாங்கம் திட்டம்

ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளுக்கான தீர்வை வரியை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழினுட்ப அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேற்படி திட்டத்தை உள்ளடக்குவதற்கு நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது வற்வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் கையடக்கத் தொலைபேசி பாவiயாளர்கள் சற்று சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் காலங்களில் கையடக்கத் தொலைபேசிகளுக்கான டேட்டாவை அதிகளவில் வழங்கி, இணைய வலையமைப்பின் மூலம் தகவல் தொடர்பாடல்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor