வௌிவாரி பட்டங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக வௌியான தகவலில் உண்மை இல்லை என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வௌிவாரி பட்டப்படிப்புக்களின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 15 பல்கலைக்கழகங்களில் புதிய வௌிவாரி பட்டப்படிப்புக்களை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.