வைத்தியசாலையில் பெண் சாவு : விசாரணைகள் ஆரம்பம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி சுகவீனம் உற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். எனினும் இந்த மரணத்தில் தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும் வைத்தியசாலையின் முறையற்ற பராமறிப்பபே இதற்கு காரணம் எனவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென யாழில் இருந்து சென்ற எண்மர் அடங்கிய மருத்துவ குழாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும். குறித்த பெண் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்ததாகவும், மரணம் தொடர்பிலான அறிக்கை மூன்று வாரத்திற்குள் கிடைக்கும் எனவும் என அந்தக் குழுவில் அடங்கியுள்ள யாழ். போதான வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருந்திர பசுபதி மயூரன் தெரிவித்தார்.