வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் நிறுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியவர்களுக்கு எதிராக யாழ். போக்குவரத்துப் பொலிஸார் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலையின் முன்னால் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களினால் வைத்தியசாலைக்குள் அம்புலன்ஸ் வண்டிகள் செல்வதிற்கு பெரும் இடையூறுகள் காணப்பட்டன.

இதனால் குறித்த விடயத்தினை கவனத்திலெடுத்த போக்குவரத்து பொலிஸாhர் நேற்று திங்கட்கிழமை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களின் விபரங்களைப் பெற்றதுடன் மேற்படி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.