வைத்தியசாலைகளுக்கு அம்பியுலனஸ் வண்டிகள் கையளிப்பு

ampulance-donateவட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் பயன்பாட்டுக்கென ஆறு அம்பியுலனஸ் வண்டிகள் மற்றும் மருத்துவ உபகரண்ங்கள் ஆகியன இன்று புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளன.

வட மாகாண ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரினால் வழங்கப்பட்டது.

சுகாதரா அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆறு அம்பியுலனஸ் வண்டிகளும் பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி, செட்டிகுளம், வெள்ளாங்குளம் மற்றும் வவுனியா ஆகிய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

32 மில்லின் ரூபா செலவில் தன்னர்வ தொண்டு நிறுவனத்தினால் அன்பாளிப்பாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor