வேலணை மனித எச்சங்கள் தொடர்பில் ஆய்வு

வேலணை பிரதேச சபை வளாகத்தில் குழிவெட்டும் போது மீட்கப்பட்ட மண்டையோடு மற்றும் எலும்புகள் தொடர்பில் ஆய்வு செய்யும்படி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன், சட்டவைத்தியதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

human_born_09

மேற்படி பகுதியில் மின்கம்பம் நடுவதற்கான மின்சார சபை ஊழியர்கள், நேற்று முன்தினம் வியாழக்கிழமை (18) குழிவெட்டியோது, அதற்குள் இருந்து மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன.

இருந்தும், இது தொடர்பில் மின்சார சபை அதிகாரிகள் பொலிஸாரிற்கு தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, வேலணை பிரதேச சபை தவிசாளர் இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் அவ்விடத்திற்கு பதில் நீதவானுடன் நேற்று வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, எலும்பு எச்சங்களை பார்வையிட்ட பதில் நீதவான் அவற்றை ஆய்வுக்குட்படுத்தும்படி சட்டவைத்தியதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

வேலணையில் மனிதப் புதைகுழி!