வேலணையில் படகோட்டப் போட்டி! பாரம்பரியத்தைக் காக்கும் துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம்!

Board-race-velanaiவேலணை துறை ஜயனார் விளையாட்டுக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட படகோட்டப் போட்டி (வள்ளம் தாங்குதல்) நேற்று இடம்பெற்றது.

இப் போட்டியினை வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை இணைப்பாளருமான சிவராசா (போல்) ஆரம்பித்து வைத்தார்.

வேலணை துறையூர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவின் பண்டைய காலத்துப் பாரம்பரிய விளையாட்டாக மேற்படி போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உப தவிசாளர் கார்த்திகேசன்; ஜே-14 கிராம சேவையாளர் குலசிங்கம் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.