வேன் மீது காட்டு யானை தாக்குதல்!! ஒருவர் பலி! 10பேர் படுகாயம்!!

புத்தளம் – அநுராதபுரம் பாதையில் கருவலகஸ்வெவ மீஓயா பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலையில் வேன் மீது காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த காட்டு யானைத் தாக்குதலில் உயிரிந்துள்ளவர், யாழ்ப்பாண பிரதேசத்தை சேர்ந்த வேலாயுதம் தர்மராஜ் என்ற 39 வயதான நபர் என தெரிவந்துள்ளது.

இதில் காயமடைந்த 2 பெண்களும் 8 ஆண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்துள்ளவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor