வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை: சுரேஸ் எம்.பி

SURESHஎதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் த.தே.கூ.வின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் விருப்பமில்லை’ என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் உண்டா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.