வெள்ளைப் பிரம்பு தின ஊர்வலம்!

வட மாகாண லயன்ஸ் கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த வெள்ளைப் பிரம்பு தின ஊர்வலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சுன்னாகம் பஸ் நிலையத்தில இருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதி வழியாக மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தை சென்றடைந்தது.

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தலைவர் செ.மகாதேவா தலைமையில் நடை பெற்ற இந்த ஊர்வலத்தில் பிரதம விருந்தினராக லயன்ஸ் கழகத்தின் இரண்டாவது ஆளுநர் வ.தியாகராசாவும் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் ச.பத்மநாதனும் கௌரவ விருந்தினராக சுன்னாகம் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி சமிந்தவும் கலந்து கொண்டார்கள்.

சுன்னாகம் வாழ்வக மாணவாகள் மற்றும் பொது மக்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.