வெள்ளி வரை குடாநாட்டில் மின்தடை

powercutவீதி அகலிப்புப் பணிகளுக்காகவும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் காலை 8.30 முதல் மாலை 5.30 மணிவரை சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

இன்று சனிக்கிழமை கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப்பிரதேசம், அராலி, கல்வயல், சரசாலை, சந்திரபுரம், மட்டுவில், ஊரெழுமேற்கு, ஊரெழு அம்மன் கோயிலடிப் பிரதேசம், கரந்தன், போயிட்டி பிரதேசம், எழுதுமட்டுவாழ் துர்க்கையம்மன் பிரதேசம், சிறுப் பிட்டி எம்.பி.சி.எஸ். செல்லப் பிள்ளையார் பிரதேசங்கள், அச்செழு இராணுவ முகாம் பிரதேசம், எருவன் பிரதேசம் ஆகிய இடங்களிலும்

நாளை ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய், கோண்டாவில், மருத்துவ பீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பட்டணப்பகுதி நீங்கலாக யாழ். மாநகரசபைப் பகுதி, ஸ்ரான்லி வீதி, பரமேஸ்வரா, கந்தர்மடம், ஆரியகுளம், வேம்படி, குருநகர், பாஷையூர், இடைக்காடு, வளலாய், பத்தைமேனி, தொண்டமானாறு வீதிப் பிரதேசம், எழுதுமட்டுவாழ் துர்க்கை அம்மன் பிரதேசம், சிறுப்பிட்டி எம்.பி.சி. எஸ். செல்லப்பிள்ளையார் பிரதேசங்கள், அச்செழு இராணுவ முகாம் பிரதேசம், எருவன் பிரதேசம், கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, செம்மணி ஆகிய இடங்களிலும்

15 ஆம் திகதி திங்கட்கிழமை, 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் ஊரெழு மேற்கு, ஊரெழு அம்மன் கோயிலடி பிரதேசம், கரந்தன், போயிட்டி பிரதேசம், எழுதுமட்டுவாழ் துர்க்கையம்மன் பிரதேசம், சிறுப்பிட்டி எம்.பி.சி. எஸ். செல்லப்பிள்ளையார் பிரதேசங்கள், அச்செழு இராணுவ முகாம் பிரதேசம், எருவன் பிரதேசம் ஆகிய இடங்களிலும்

17 ஆம் திகதி புதன்கிழமை சிறுப்பிட்டி எம்.பி.சி.எஸ். செல்லப்பிள்ளையார் பிரதேசங்கள், கரந்தன், போயிட்டி பிரதேசம், எழுதுமட்டுவாழ் துர்க்கை அம்மன் பிரதேசம், அச்செழு இராணுவ முகாம் பிரதேசம், எருவன் பிரதேசம், இடைக்காடு, வளலாய், பத்தை மேனி, தொண்டமனாறு வீதிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்

18 ஆம் திகதி ஆம் திகதி வியாழக்கிழமை சிறுப்பிட்டி எம்.பி.சி.எஸ்.செல்லப்பிள்ளையார் பிரதேசங்கள், கரந்தன், போயிட்டி பிரதேசம், எழுதுமட்டுவாழ் துர்க்கை அம்மன் பிரதேசம், அச்செழு இராணுவ முகாம் பிரதேசம், எருவன் பிரதேசம்ஆகிய இடங்களிலும்

19 ஆம் திகதி ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறுப்பிட்டி எம்.பி.சி.எஸ்.செல்லப்பிள் ளையார் பிரதேசங்கள், கரந்தன், போயிட்டி பிரதேசம், எழுதுமட்டுவாழ் துர்க்கை அம்மன் பிரதேசம், கொடிகாமம், முதல் வரணி வரையான பிரதேசங்கள், அச்செழு இராணுவ முகாம் பிரதேசம், எருவன் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று யாழ். பிரதேச மின்பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Related Posts