வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்க யாழ்.பல்கலை. கலைப்பீட மாணவர்கள் தீர்மானம்

jaffna-universityகிழக்கில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு வெள்ள நிவாரணம் ஒன்றை மேற்கொள்ள யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இதன்படி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை இன்று 30ம் திகதி முதல் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்நிவாரணமானது அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்காக பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய அத்தியாவசியப் தேவைகளைப் பூர்த்தி செய்தவற்கு தேவையான உதவிகளை பணமாகவே அல்லது பொருளாகவே வங்குமாறு கலைப்பீட மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor