பொதுநலவாய மாநாட்டிற்காக வருகை தந்த 48 வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
இச்சந்திப்பில் யாழ். மாவட்டத்தின் கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்கள் பற்றி அரச அதிபர் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கின்றார்.
நேற்று இரவு யாழ்ப்பாணம் வருகை தந்த மேற்படி வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று காலையில் நயினாதீவுக்குச் சென்றிருந்ததுடன், தொடர்ந்து யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.