மேற்குல நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகியமையை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பறவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வந்துள்ளன.குறித்த பறவைகள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் உள்ள நீர்நிலைகளில் தஞ்சமடைந்துள்ளன.
இப்பறவைகளின் வருகை அடுத்து யாழ் மாவட்ட சுகாதார சேவைப் பிரிவினர் மக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வந்திறங்கும் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடி உண்பது உடலுக்கு கேடு விளைவிக்குமென அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப் பறவைகளின் வருகையானது ஒவ்வொரு வருடமும் யாழ் குடாநாட்டுக்கு வருவதும் பின்னர், ஜனவரி மாத பிற்பகுதியில் இங்கிருந்து செல்வது வழங்கமாகவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.