வெளிநாட்டவர் வடபகுதிக்குள் நுழைய புதிய நடைமுறை!

வெளிநாட்டவர்கள் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியை தாண்டி வட பகுதிக்குள் நுழைவதற்கு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

omanthai-check-post

வட பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வட பகுதிக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை (MOD) பெற்றே செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தத் தகவலை அறியாது வருகை தந்த வெளிநாட்டவர்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமையால் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறை ஜனாதிபதியின் வடபகுதி விஜயம் முடிவடைந்ததன் பின்னர் இருக்காது எனவும் தெரியவருகின்றது.