வெளிநாட்டவர்களை இலக்குவைத்து அரசாங்கம் மேற்கொள்ளும் 2 தீர்மானங்கள்

வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மூன்று நான்கு வாரங்களில் அரசாங்கம் இந்த புதிய நடைமுறையை அமுல்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் விரைவில் காணிச் சட்டத்தை திருத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வெளிநாட்டுப் பிரஜைகள் காணிகள் கொள்வனவு செய்வதனை தடுக்கும் வகையில் தற்போது நாட்டில் சட்டம் காணப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் வர்த்தக நோக்கங்களுக்காக கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 300,000 அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜைக்கும் பத்தாண்டுகால தற்காலிக வீசா அனுமதியை வழங்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

Related Posts