நெதர்லாந்து பிரஜையொருவரின் இரண்டு கமெராக்கள் நேற்று புதன்கிழமை திருடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணியாக வந்த அவர், யாழ். நகர பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் மதியம் உணவு உண்பதற்காக் சென்றுள்ளார். இதன்போது இரு கமெராக்களையும் வாகனத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
மீண்டும் திரும்பி வந்து வாகனத்தை பார்க்கும் போது இரு கமெராக்களும் திருடப்பட்டுள்ளன. அவர் உடனடியாக இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்த இரண்டு கமெராக்களின் பெறுமதி பெறுமதி 110 யூரோ என்றும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக யாழ். பொலிஸார் கூறினர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.