வெளிநாடு செல்வோர் இனி அடையாள அட்டை கொண்டுசெல்ல முடியாது!

வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டுசெல்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார்.

r_m_s_sarathkumara

தேசிய அடையாள அட்டையில் விபரங்கள் சிங்களம் மற்றும் தமிழில் மாத்திரமே காணப்படுவதால் அதனை வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு நீண்ட காலப் பயணங்களை மேற்கொள்பவர்கள் அடையாள அட்டைகளை கொண்டுசெல்வது தொடர்பாக கடுமையான நடைமுறைகளை பின்பற்றவுள்ளோம். வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு இது குறித்து அறிவுறுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.