வெற்றுக்கண்ணால் சூரியனைப் பார்க்க வேண்டாம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வானில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்நாட்களில், வெற்றுக் கண்களால் சூரியனை பார்க்க வேண்டாம் என ஆதர் சீ கிளாக் மத்திய நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.வானில் ஏற்படும் மாற்றத்தினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாகவும் இதன் காரணமாக பார்வை கோளாறு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனவும் ஆதர் சீ கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் அண்மைக்காலமாக வானில் மர்மப் பொருள் தெரிதல், எரிகல் விழுதல் உள்ளிட்ட பல மாற்றங்கள் இடம்பெற்றுவருவதாக வானிலை கட்டுப்பாட்டு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.