இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்குமென்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பூராவும் இந்த நாட்களில் காணப்படுகின்ற வெப்ப வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை இலங்கையின் மேல் சூரியன் நேரே உச்சம் கொடுப்பதால் மேலும் வெப்பம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் இது வழமையான தோற்றப்பாடெனவும்; அவர் கூறினார்.
இதேவேளை
4,000 ஆண்டுகளில் பின் அதிக வெப்பம்
உலகின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. குறைந்த பட்சம் 4000 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்வடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனித இனத்தின் தவறான செயல்பாடுகளால் வெப்பநிலையில் இந்த மற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவரை நவீன புவியியல் யுகத்தில் நாம் கண்டிராத அளவு அதிக வெப்பத்தை நாம் உணர்வோம்.
நவீன புவியியல் யுகத்தின் ஒரு பகுதி 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த காலத்தில் தான் அதிக வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்த சூரிய ஒளியின் அளவில் மாற்றம் ஏற்பட்டது.
வட துருவங்களில் பனிக்கட்டிகளின் உருகும் அளவு அதிகரித்துள்ளது. 8000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனித நாகரிகம் உருவானது. அதன் பின்னர் தொடர்ந்து வளர்ச்சி அடைந்த மனித நாகரிகம் இந்த வெப்பநிலை மாற்றத்துக்கு காரணமாக இருக்கிறது என்று ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.