வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் நேற்று (புதன்கிழமை) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.



இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டடிருந்தனர்,
இதேவேளை வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி மாதம் இறுதிப் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மீளவும் தெய்வ திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு, தொடர்ச்சியாகப் பன்னிரெண்டு நாட்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடதக்கது.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							