வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது

arrestநீர்வேலிப் பகுதியில் ரி.என்.ரி. வெடிமருந்துகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேயிடத்தினைச் சேர்ந்த ஆசைப்பிள்ளை சசீந்திரன் (வயது 36) என்பவர் புதன்கிழமை (30) இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.எம்.கே. சமன் ஜெயசிங்க தெரிவித்தார்.

மேற்படி நபரிடமிருந்து 23 கிலோ 270 கிராம் ரி.என்.ரி வெடி மருந்தினையும் மீட்டதாகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor