Ad Widget

வெடிகுண்டுக்கே பூ சுற்றிய பெண்

இங்கிலாந்தின் கவன்ட்ரி பகுதியில் கேத்ரின் ராவ்லின்ஸ் என்ற 45 வயது பெண்மணி, தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியாக இருந்த போது ஒருநாள், வீட்டருகே உள்ள வயல்வெளியில் குவளை போன்ற ஒரு பொருள் கிடைத்தது. அதை எடுத்து வந்த அவர், அதை பூ வைக்கும் ஜாடியாக பயன்படுத்தி வந்தார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கேத்ரினின் வீட்டுப்பொருட்களில் இந்த ஜாடி முக்கிய பங்கு வகித்து வந்தது. சமீபத்தில் அவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது, அதில் முதல் உலகப்போர் குறித்த ஆவணப்படம் ஒன்று ஒளிபரப்பானது.

அதில், கவன்ட்ரி பகுதியில் ஜெர்மனி போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தது காட்டப்பட்டது. இதைப்பார்த்து கலவரமான கேத்ரின், தனது பூ ஜாடியை சோதித்து பார்த்தார். அப்போது, அதுவும் வெடிகுண்டாக இருக்குமோ? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.

உடனே இது குறித்து போலீசாருக்கு அறிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோதுதான், கேத்ரின் பயன்படுத்தி வந்தது வெடிக்காத வெடிகுண்டு என்பது தெரியவந்தது. இதைக்கேட்ட அதிர்ச்சியில் இருந்து கேத்ரின் மீள்வதற்கு அதிக நேரமானது.

Related Posts