வெசாக் தினத்தன்று 200 பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் தினத்தன்று பாடசாலை மாணவர்கள் 200 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக இராணுவத்தின் வெசாக் தின ஏற்பாட்டாளர் லெப்ரினல் கேணல் சந்தன அறங்கல்லா தெரிவித்தார்.

army-vesak-meeting

அதாவது மாணவர்கள் பெயரில் வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யாழ். சிவில் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திபிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் இருந்து பதினொராம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களில் மிக அவசியத்தேவையுள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேற்படி புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

இந்த வெசாக் ஏற்பாடானது மதவேறுபாடின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தர் பௌத்த மதத்திற்கு வருவதற்கு முன் இந்தியாவில் இந்து மதத்தினையே பின்பற்றினார் என்று சொல்லப்படுகின்றது.

இத்தினத்தில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சக்கூடுகள், சகாசங்கள், இலவச உணவு வளங்கள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் யாழில் முதன் முதலாக மிகப்பெரிய வெசாக் தோரணம் அமைக்கப்படவுள்ளது. இதனை 14ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பார்வையிடமுடியும். இது 43 அடி உயரமும் 42 அடி அகலமும் கொண்டதாகும்.

வெசாக் கொண்டாட்டங்கள் 3 தினங்கள் இடம்பெறும். இதற்கு வடமாகான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதப்பெரேரா யாழ். மாநகர சபை மேஜர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Related Posts