வீதி விளக்குகள் இனந்தெரியாதவர்களினால் சேதம்

Street_Lampஏழாலை மேற்கு பகுதியில், வலி.தெற்கு பிரதேச சபையினால் பொருத்தப்பட்ட ஆறு வீதி விளக்குகளும் இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மைக் காலமாக, பொதுமக்களின் தேவை கருதி வலி.தெற்கு பிரதேச சபை, வீதி விளக்குகளை கட்டம் கட்டமாக பொருத்தி வருகின்றது.

இந்நிலையிலேயே, இனந்தெரியாத நபர்கள் வீதி விளக்குகளை சேதப்படுத்தும் விசமத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் சந்திகளில் இருந்து மது அருந்துபவர்களே இத்தகைய விசமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகளானது திருடர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.