துன்னாலை பூதராயன் வீதியில் வீதி விளக்குகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த, கரவெட்டிப் பிரதேச சபை மின்சார ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 12.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் கரணவாய், அண்ணா சிலையடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான செல்லத்தம்பி சுதர்சன் (வயது 42) என்பவரே உயிரிழந்தார்.
இவரது சடலம் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.