வீதி விபத்துக்களில் அதிகளவில் இளைஞர்களே உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகளவில் இளைஞர்களே உயிரிழப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் விபத்துக்களில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 509 பேரில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இரண்டாவது காலாண்டில் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் விபத்துக்களில் சிக்கிய 387 பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் வீதிவிபத்துக்களில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 896 பேரில், 19 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 204 பேர் வீதி விபத்துக்களில் சிக்கி, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் 30 வயதிற்கும் குறைவானவர்கள் எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Recommended For You

About the Author: Editor