மினி பஸ்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்ததுள்ளனர். இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து யாழ். கொக்குவில் பகுதியில் நேறு்று மதியம் 3.30 மணியளவில்இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த எஸ்.சுரேஸ் (வயது 32) என்பவரே அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.