வீதி விபத்தால் 43 பேர் மரணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வீதி விபத்தால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, சனிக்கிழமை (31) தெரிவித்தார்.

sribavanantharaja_jaffna_hos

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் வீதி விபத்து காரணமாக 2,261 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதில் ஜூலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் கூடுதலான விபத்து இடம்பெற்று 709 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இது ஏனைய காலாண்டுகளை விட அதிக உயிரிழப்பாக பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Posts