வீதியோரத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வல்லிக்குறிஞ்சி முராலி பிள்ளையார் கோவிலுக்கு அருகில், தலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம், செவ்வாய்க்கிழமை (27) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

துன்னாலை வடக்கு போதனாமடம் பகுதியை சேர்ந்த சரவணமுத்து சந்திரமோகன் (வயது 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் உழவு இயந்திரத்தின் சில்லின் அடையாளம் காணப்படுவதுடன், சிறிது தூரத்தில் சில்லில் ஒட்டியிருந்த இரத்தக்கறையும் படிந்திருந்தாக பொலிஸார் கூறினர்.

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் இவர் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts