இந்திய வீட்டுத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 50000 வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.அவற்றில் 10000 வீட்டுத் திட்ட உதவிகளே யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம் அடைந்த நலிவற்றோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மேலும் இந்திய வீட்டுத்திட்டத்தில் 1898 வீடுகள் பூரத்தியாக்கப்பட்டுள்ளன.அதிலும் 186 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டும் யாரும் பயன்படாத விதத்தில் விடப்பட்டுள்ளது.
அதாவது சண்டிலிப்பாய் பிரதேசத்தில் 3வீடுகள்,வேலணை 3வீடுகள், தெல்லிப்பளை 113வீடுகள்,சாவகச்சேரி 57வீடுகள் ,மருதங்கேணி 8வீடுகள்,நெடுந்தீவு 2வீடுகளுமாக மொத்தம் 186 வீடுகள் கட்டப்பட்டு பூர்த்தியாக்கப்பட்டும் வீட்டுக்குச் சொந்தமான பயனாளிகள் பயன்படுத்தாமல் உள்ளனர்.
அவ்வாறாக இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் வீடுகளை கட்டியும் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட கால அவகாசம்கொடுத்து அந்த காலத்திற்குள் அவர்கள் அங்கு குடியமர வேண்டும்.
அவ்வாறு குடியமரவில்லை ஆயின் வீட்டுத் தேவையுடைய வேறு நபர் அங்கு குடியமர்த்தப்படுவர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.