விஷ ஊசி விவகாரம்! பரிசோதனைக்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்!

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போட்டப்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட உள்ள சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு ஆலோசனை வழங்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த குழுவை நியமித்துள்ளார்.

வட மாகாண சுகாதார அமைச்சர் பீ. சத்தியலிங்கத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த குழுவை முதலமைச்சர் நியமித்துள்ளார்.

ஐவர் அடங்கிய இந்த குழுவின் தலைவராக யாழ்ப் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் சிவன்சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குழுவின் பரிந்துரைக்கு அமைய வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் உப குழுக்களும் நியமிக்கப்பட உள்ளன.

எது எப்படி இருந்த போதிலும் இந்த சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு அமெரிக்கா உதவாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor