விளையாட்டுப் போட்டிகள் மற்றும் குறும்படங்களுக்கான விருது வழங்கல்

3ஏ மூவிஸ் நிறுவனத்தினால் விளையாட்டுப்போட்டிகள் மற்றும் குறும்படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்ப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், ஹொக்கி, தாச்சி ஆகிய விளையாட்டுக்களில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு மேற்படி விருது வழங்கும் நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் இலங்கை ரீதியில் சிறந்த குறும்படமாக கனகராஜா சுதர்ஷனின் இயக்கத்தில் உருவாகிய ‘எழுத்துப்பிழை’ குறும்படம் விருது பெற்றது.

சிறந்த குறும்பட நடிகராக எழுத்துப்பிழை குறும்பட நடிகர் எஸ்.தர்மலிங்கமும், சிறந்த குறும்பட நடிகையாக அதே படத்தில் நடித்த ஸ்ரீபன் பிரியதர்சினியும் தெரிவு செய்யப்பட்டனர்.

சிறந்த குறும்பட இயக்குனராக ‘ஒரு அழைப்பு’ குறும்பட இயக்குனர் ஏ.அம்ஷா தெரிவு செய்யப்பட்டார்.