விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்க்கு முன்னர் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

medical_checkupவிளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்க்கு முன்னர் மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கே ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவனல்ல ரிவிசந்த கல்லூரியின் பாடசாலை விளையாட்டுப் போட்டியின்போது 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான மாணவி ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.