விரிவுரையாளர் தாக்கியதில் மாணவன் படுகாயம்

attack-attackயாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தாக்கியதில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவன், விரிவுரையாளரிடம் மாலைநேர வகுப்பிற்கு சென்ற போதே, விரிவுரையாளரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தினை அறிந்த பெற்றோர் மாணவனை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.