Ad Widget

விபத்தில் 2 இராணுவ வீரர்கள் காயம்

accidentஇராணுவத்தினரின் டிரக் வண்டியும் ஹயஸ் ரக வாகனமும் விபத்திற்குள்ளானதில் 2 இராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கந்தர்மடம் சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 09.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக யாழ். போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வா தெரிவித்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

புஞ்சு பண்டா (வயது 47), அபயக்கோன் (வயது 33) ஆகிய இராணுவ வீரர்களே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். முரளி (வயது 19) இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் யாழ். போக்குரவத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts