விபத்தில் முதியவர் மரணம்

accidentமல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவரொருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

மல்லாகம் பழம் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோதே இவர் விபத்திற்குள்ளாகியுள்ளார்.

மல்லாகம் வீதியைச் சேர்ந்த தில்லையம்பலம் இராசலிங்கம் (வயது 68) என்பவரே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார்.

வேகமாக வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் இம்முதியவரின் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor