யாழ்.காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நடந்த விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்ரதத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் தாவடி காளி கோவிலடியினைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது17) என்னும் மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வீதியில் இருந்த பாதசாரிக் கடவைக்கு அருகிலும் மிக வேமாக வந்து கொண்டிருந்த பட்டா வகை வாகனம் வீதியால் சென்று கொண்டிருந்த மாணவனை மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.