Ad Widget

விபத்தில் தாய் பலி: மகன் படுகாயம்

முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன், மோட்டார் சைக்களில் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் ஒருவர் பலியானதுடன் அவருடைய 14 வயது மகன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாள்புரம் வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்த இரவிக்குமார் இன்பமலர் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இச்சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார். அவரது மகன் இரவிக்குமார் கீதன் (வயது 14) என்பவர் தற்போது சிகிக்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts