விபத்தில் ஒருவர் மரணம்

சாவகச்சேரி தனங்கிளப்புச் சந்தியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் வெள்ளிக்கிழமை (01) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

தனங்கிளப்பைச் சேர்ந்த இராசதுரை (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் சங்குப்பிட்டியிலிருந்து தனங்கிளப்பை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts