விபத்தில் ஒருவர் பலி

யாழ். கொடிகாமம், புத்தூர்ச் சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பரஹவத்த அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த வீவத்தாஹே நிஹால் (வயது 38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவர் மகா நிறுவனத்தின் வீதி அபிவிருத்தி பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.