மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கம்சன் (வயது 23) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
வீதிக்கு குறுக்கே போடப்பட்டிருந்த தடுப்புடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ். உரும்பிராய் மானிப்பாய் வீதியிலேயே இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.