மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக நாய் ஒன்று ஓடி விபத்துக்கு உள்ளானதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சிறுவிளான் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ரவிராஜ் (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு முன்பாகவே நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர் சுன்னாகம் பகுதியிலிருந்து வீடு திரும்புகையிலேயே விபத்திற்கு உள்ளானதாகவும் இவ்விபத்தில் படுகாயமடைந்த இவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியாசலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான விசாரணையை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.