வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்களான 9 பேரையும் 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி உத்தரவிற்கமைய ஏற்றுக் கொண்டு இன்றிலிருந்து 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்களை விசாரிக்க மன்று உத்தரவிட்டது.
இதேவேளை மன்றின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்கள் 9 பேரையும் விசாரணைக்காக குற்ற புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.