கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கிளியூர் ரமணன் உருவாக்கிய ‘வித்தியா கீதங்கள்’ என்ற இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றது.