வலி வடக்கு, வித்தகபுரம் பகுதியில் நாய் கடிக்கு பலர் உள்ளாகி வருகின்றனர். இது பொதுமக்களால் பிரதேச சபை மற்றும் சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்துள்ள போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வித்தகபுரம் பகுதியில் பலர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ள நிலையில், அவ்வாறு அங்குள்ள மக்களைக் கடித்துவரும் நாய் ஒன்று அண்மையில் இறந்துள்ளது. இவ்வாறு இறந்த நாயின் கழுத்து வெட்டப்பட்டு தெல்லிப்பளை சுகாதராப் பிரிவு அதிகாரிகளினால் பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுகாதார வைத்தியதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாயக்கிழமை முழுவதும் வித்தகபும் மற்றும் அதனை சுற்றிய அயல் பகுதிகளில் நாய்கடி சம்பந்தமான விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்களையும் வழங்கியுள்ளார்கள்.