விதவைப் பெண்கள்,வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்டோரின் விபரம் திரட்டும் இராணுவம்!

RegPenகுடாநாட்டின் பல பகுதிகளிலும் விதவைப் பெண்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தந்தப் பகுதிகளிலுள்ள இராணுவத்தினரே மக்களைப் பொது இடத்துக்கு அழைத்து இந்த விவரங்களைப் பதிவு செய்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

வடமாகாண சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை உடுவில் ஆலடி வைரவர் கோயிலடிகுச் சென்ற மானிப்பாய் இராணுவ அதிகாரிகள், மக்களிடம் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

விதவைப் பெண்கள், வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்கள் தொடர்பான குடும்ப விவரங்களையே அவர்கள் பதிவு செய்துள்ளனர். தேர்தலை இலக்கு வைத்தே இராணுவத்தினர் இந்த நடவடிக்கையை முன்னெடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.